RSS

Tuesday 19 October 2010

ஆன்மீகத் தலைவரை பெருந் திரளாக கும் நகர மக்கள் கூட்டம் வரவேற்றது.

அரசியல் குழு: நபிகளார் (ஸல்) அவர்களையும் அன்னாரின் அஹ்லல் பைத் (ஸ) விரும்பும் கும் மக்கள் பெரும் கூட்டத்துடன் ஆர்வத்துடன் ஆன்மீகத் தலைவர் அவர்களை வரவேற்றனர். 

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): இன்று செவ்வாய் கிழமை ஒக்டோபர் மாதம் பத்தொன்பதாம் நாள் 2010 ம் ஆண்டு, இமாம் ரிஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தை வருடா வருடம் கொண்டாடும் இந்த இனிய நாளில் தலைவர் வரும் முன்னனே பல மணித்தியாலத்துக்கு முன்பாக வந்து காத்திருந்து அவர்களை பூக்கொத்துக்கள் நிறைந்த கையுடன் வரவேற்றனர். ஹஸ்ரத் மஃசூமா (ஸ) அவர்களின் ஹரம் முடிவாகும் தெருக்கள் வரை பெருந்திரளான மக்கள் கூட்டம் எல்லாம் பிரதேசத்திலிருந்தும் வந்து குவிந்து கொண்டிருந்தனர். 

ஆன்மீகத் தலைவர் அவர்கள் சவார் செய்து கொண்டிருந்த வாகனத்தை அண்டிப்பிடித்த மக்கள் கூட்டம் அவ்வாகனம் நகர விடாமல் வாகத்தை நகர விடாமல் அவர்களின் திரு முகத்தை நெருங்கி நின்று காணுவதற்காக ஒவ்வொரும் முண்டியடித்துக் கொண்டு முன் சென்றனர். 

பெண்களும், ஆண்களும், அதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் அனைவரும் அவர்களின் புகைப்படங்களை கையேந்தியவர்களாக அவர்களை புகழ்ந்துரைத்தவர்களாக 'அபு பஸ்ழ் அலம் தார் காமனெயியை தக்க வையும், கும் மக்கள் இஜ்திஹாத் உடையவர்கள், யுத்தத்திக்கும் நாம் தயார், நாம் அலியுடைய ஆதரவாளர்கள் போன்ற கோசங்களை எழுப்பியவர்களாக அவர்களை நீடுழி காலம் வாழ்க என வாழ்த்தி வரவேற்றனர். 

தெருவெங்கும் மக்கள் இனிப்புப் பண்டங்களை மக்களுக்கு வழங்கியவர்களாகவும், நேர்ச்சைகளை வருகை தந்தோர்களுக்காக வழங்கியவர்களாகவும் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இன்று அனைத்து கல்வி கூடங்களும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதுடன், ஜாமியத்துஸ் ஸஹ்ரா பெண்கள் பல்கலைக்கழக மாணவிகளும் அல் முஸ்தபா (ஸ) பல்கலைக்கழக மாணவர்களுமாக ஆயிரக் கணக்கானவர்கள் குவிந்தவர்களாக அவர்களின் புகைப்படங்களை கையேந்தியவர்களாக 'தலைவரே நீர் தான் எங்கள் முஸ்லிம் உம்மத்துக்களின் தலைவர்' என்பதை தெரிவித்து அவர்களை வரவேற்றனர். 


மற்றும் பெரும் அறிஞர் ஆயத்துல்லாஹ் பெஹ்ஜத் அவர்கள் தெரிவித்த விலாயத்தே பகீஹ்க்கும் மற்றும் பலத்தீனர்களுக்காக ஆதரவை தெரிவிக்கும் வாசகங்களை மக்களுக்கு பகிர்தளிக்கப் பட்டது. 

இன்று கும் மக்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியக் கூடியவாறு தாங்கள் வுலாயத்தே பகீஹ்யை பின்பற்றுவவர்கள் என்பதனை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தக்க பதிலடியாக நிரூபித்து காட்டினர். ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக செய்தி ஊடகங்கள் ஏதொவெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர்கள் இன்றைய நாளை அவர்கள் தன் கண்களால் கண்டு கொள்ளட்டும் என்பதனையும் உலகிற்கு ஒரே கோசத்துடன் ஆன்மீகத் தலைவர் தான் எங்கள் விலாயத்தே பகீஹ் என்பதனை இத்துடன் அவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று தங்களது முழு ஆதரவையும் வழங்கியவர்களாக மக்கள் திரண்டு காணப்பட்டனர்.

No comments:

Powered by Blogger.