RSS

Friday 15 October 2010

நெதர்லாந்தில் திரையிடப்படவுள்ள 'புனித அல்குர்ஆனின் அற்புதங்கள்' ஆவணத் திரைப்படம்

சர்வதேச குழு: நெதர்லாந்திலுள்ள அல்கவ்சர் கலாசார நிறுவகம், அந்நாட்டின் பிரதான நகரங்களுள் ஒன்றான ஹகுவில், புனித அல்குர்ஆனின் அற்புதங்கள் எனும் தலைப்பிலான ஆவணத் திரைப்படமொன்றைத் திரையிடத் திட்டமிட்டுள்ளது என சடலராக் செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. 

இத்திரைப்படம், அக்டோபர் 15ம் திகதியாகிய இன்று, பரீட்சார்த்தமாகத் திரையிடப்பட்டது.
புனித அல்குர்ஆனின் அற்புதங்கள் திரைப்படம், புனித அல்குர்ஆன் சுமார் 1400 வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட, தற்போதுதான் விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்ற விஞ்ஞான உண்மைகள் குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

இத்திரைப்படம், துருக்கியின் விஞ்ஞான எழுத்தாளர் ஹாருன் யஹ்யாவினால் இயக்கப்பட்டுள்ளது. 

புனித அல்குர்ஆன் வெறுமனே விஞ்ஞான நூல் மாத்திரமன்று. மாறாக, ஒவ்வொருவரும் அய்ந்து கண்டறிந்து விளங்குவதற்கேற்ற விஞ்ஞான உண்மைகளை விளக்கும் பண்பையும் அது கொண்டுள்ளது என யஹ்யா குறிப்பிட்டார். 

படைத்தவன் அல்லாஹ், மானுட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொருட்டும் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் மறுமை வெற்றியையும் வழங்கும் பொருட்டும் புனித அல்குர்ஆனை உலகுக்கு இறக்கியருளியுள்ளான் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Powered by Blogger.