RSS

Sunday 17 October 2010

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த குர்ஆன் பிரதி உள்ளூர் தேவாலயத்தில் கண்டெடுப்பு

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள மெட்போர்ட் தேவாலயத்தின் சிறு அறையொன்றில் மறைவாக இருந்த குர்ஆன் பிரதியொன்றை ஆய்வாளரொருவர் வியக்கத்தக்க வகையில் கண்டுபிடித்துள்ளார்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் சேவையாற்றிய கிறிஸ்தவ பாதிரி டேவிட் ஒஸ்குட் என்பாரின் நூலகத்தின் ஒரு பகுதி நூல்களை பரிசோதிப்பதற்காக கிறிஸ்தவ பாதிரியார் ஹன்க் பியர்ஸ் என்பார், மீட்பர் தேவாலயத்திற்குச் சென்றார்.

அங்கு குவிக்கப்பட்டிருந்த பல்வேறு தொகுதிகளுக்குள்ளிருந்து, 1795ம் வருடத்தில் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதியொன்றை அவர் கண்டெடுத்துள்ளார்.
பியர்ஸ் இது பற்றிக் குறிப்பிடும் போது, ஒஸ்குட் ஒரு உண்மையான அறிவியல் ஆர்வமுள்ள மதகுரு என்பதை அந்த சிறிய மாநிற நூல் காண்பிக்கின்றது என்றார்.

அவர், அமெரிக்கப் புரட்சியின் இறுதிப் பகுதியில் இருந்தார். மிகப் பெரும் மாற்றத்திற்கான நேரமாக அது இருந்தது. இந்நிலையில் சமய நூல்கள் என்ன கூறுகின்றன என்பதை அறியும் நோக்குடன் அவர் இத்தகைய தொகுப்புகளை சேகரித்துள்ளார் எனவும் பியர்ஸ் தெரிவித்தார்.
இந்நூல் வெளியிடப்பட்ட காலத்தில், மஸ்ஸசஸெட்ஸ் நகரில் முஸ்லிம்கள் எவரும் வசித்து வரலில்லை எனவும் பியர்ஸ் குறிப்பிட்டார். 

இந்நூலுடன் இணைந்ததாக, பொஸ்டன் துறைமுகத்திலான இந்தியத் தாக்குதல் குறித்த செய்திப் பத்திhகையொன்றையும் பியர்ஸ் கண்டெடுத்துள்ளார்.

No comments:

Powered by Blogger.