RSS

Monday 11 October 2010

இஸ்லாமோ போபியாவை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றி ஆராய்வதற்கான கலாசாரக் குழுக்கள்


சர்வதேச குழு: இஸ்லாமோபோபியா மற்றும் இஸ்லாமிய விரோத செயல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆராய்வதற்கான அமர்வொன்று நாட்டின் கலாசார அமைப்புகளின் பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன் இடம்பெறவுள்ளது.

இவ்வமர்வு, குர்ஆனிய கலாசார அபிவிருத்திக்கான கவுன்சிலின் செயலகத்தினால் நடத்தப்படவுள்ளது.
உலகில் இஸ்லாமோபோபியாவின் பரவலைத் தடுப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலான அரசியல், கலாசார மற்றும் ஊடகத் துறைகளிலுள்ள நடைமுறை வழிகள் பற்றி இதன் போது கவனத்திற் கொள்ளப்படும்.

இச்சந்திப்பின் வருவிளைவு, அக்டோபர் 16ம் திகதி இடம்பெறவுள்ள கவுன்சிலின் அடுத்த அமர்வின் போது முன்வைக்கப்படும்.

வாரமொன்றை குர்ஆனிய வாரமாகப் பிரகடனப்படுத்தல், முஸ்லிம் நாடுகளுக்கான குர்ஆனிய அடையாளத்தை வடிவமைத்தல், மில்லியன் அளவிலான குர்ஆன் பிரதிகளை வெளியிடுதல், சர்வதேச உள்ளக மாநாடுகளை ஒழுங்கு செய்தல் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சட்டத்தரணிகள் அமைப்பை நிறுவுதல் என்பன தொடர்பான விடயங்களும் இதன் போது ஆலோசிக்கப்படவுள்ளன

No comments:

Powered by Blogger.