RSS

Monday 11 October 2010

ஈரான் ஜனாதிபதியின் லெபனான் விஜயம் பிரமாண்டமாக வரவேற்க ஹிஸ்புல்லா ஏற்பாடு

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் லெபனானுக்கு விஜயம் செய்யவுள்ளதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பு பாரிய வரவேற்பு ஏற் பாடுகளைச் செய்துள்ளது. லெப னானிலுள்ள ஷியா முஸ்லிம்களை யும், பலஸ்தீனர்களையும் (அகதி முகாம்மிலுள்ள) ஈரான் ஜனாதி பதியை வரவேற்கும் வைபவத்தில் இணைந்து கொள்ளுமாறு ஹிஸ் புல்லா அழைப்பு விடுத்துள்ளது.
இம் மாதம் 13, 14ம் திகதிகளில் அஹ்மெதிநெஜாத் லெபனான் செல்லவுள்ளார். இவர் இஸ்ரேலின் எல்லையிலுள்ள பின்ற் ஜிப்லி என்ற கிராமத்துக்கும் செல்வார். 

1996, 2006ம் ஆண்டுகளில் இஸ்ரேல், லெபனானிடையே நடந்த யுத்தங்களில் பின்ற் ஜிப்லி என்ற லெபனான் கிராமம் கடுமையாகத் தாக்கப்பட்டது இஸ்ரேலின் எல்லையில் இக்கிராமம் உள்ளதால் இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி இக்கிராமத்தைப் பதம்பார்த்தது அங்கிருந்துதான் இஸ்ரேல்மீது கற்களையும், எறிகணைகளையும் ஹிஸ்புல்லா ஏவுவதாக இஸ்ரேல் நம்புகின்றது..
இதனால் பின்ற்ஜிப்லி என்ற கிராமம் இஸ்ரேலின் பாரிய அழிவுக்குள்ளாகியுள்ளது. இங்கு வரும் ஈரான் ஜனாதிபதி, ஹிஸ் புல்லா வீரர்களின் மண்ணறைக ளையும் தரிசிக்கவுள்ளார். இங்கி ருந்து அஹ்மெதி நெஜாத் இஸ் ரேலைநோக்கி கற்களை வீசவுள்ள தாகவும் செய்திகள் வந்துள்ளன. 

இதை ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா மறுத்துள்ளார். இவை வதந்திகள் என்றார். அஹ்மெதி நெஜாதின் திட்டத்தில் இஸ்ரேலுக்கு கல்லெறியும் விடயமில்லை.
அஹ்மெதிநெஜாத் இது பற்றி என்னிடம் கேட்டால் உங்களுக்கு (நெஜாத்) இஸ்ரேல் மீது ஒருகல் அல்ல பலகற்களை வீசமுடியுமென்பேன் என்றார் ஹஸன்நஸரல்லா லெபனானிலுள்ள பலஸ்தீனர்களின் அகதி முகாம்களை யும் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பார்வையிடவுள்ளார். 

இவ ரின் வருகையை முன்னிட்டு பாது காப்பு ஏற்பாடுகளும் கடுமை யாக்கப்பட்டுள்ளன. ஹமாஸ் ஹிஸ் புல்லா, சிரியாவிலுள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கு ஈரான் நவீன ஆயுதங்களை விநியோகிப்பதாக இஸ்ரேல் அடிக்கடி குற்றம்சாட்டு கின்றது. 

2006ம் ஆண்டு இடம்பெற்ற மோதலில் ஹிஸ்புல்லா அமைப் பினர் இஸ்ரேலை நோக்கி வீசிய எறிகணைகள், ஏவுகணைகள் என் பன ஈரானின் தயாரிப்புகள் என்ப தற்கான ஆதாரங்களையும் ஐ.நா.வி டம் இஸ்ரேல் சமர்ப்பித்தது இன் னும் இஸ்ரேலின் எல்லைகளிலுள்ள லெபனானின் கிராமங்களில் ஹிஸ் புல்லா ஆயுதங்களைச் சேகரிப்பதாக வும் யுத்தத்துக்கு தயாராகின்ற தென் றும் இஸ்ரேல் கண்டனம் வெளி யிட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரான் ஜனாதிபதியின் லெபனான் விஜயம் அமைந்துள்ளது.

லெபனான் அரசியலில் ஹிஸ்புல்லாவும் பிர தான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் அஹ்மெதிநெஜா தின் விஜயம் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலும் ஆழ்ந்து அவதானித்துள்ளது.

No comments:

Powered by Blogger.