RSS

Monday 11 October 2010

குர்ஆனை எரித்தவர் மீது பிரெஞ்சு பொலிஸார் விசாரணை

சர்வதேச குழு: இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒர் ஒளிப்பதிவுக் காட்சியில், குர்ஆன் பிரதிகளை எரித்த மனிதர் பற்றி பிரெஞ்சு பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கிழக்குப் பிராந்திய பிஷ்ஹிம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான குறித்த மனிதரை உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் அடையாளங் கண்டு, அவரது செயல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். குர்ஆன் பிரதிகளை எரிக்கு முன், தனது முகத்தை மூடியிருந்த முகமூடியை நீக்கி அவர் தனது முகத்தைக் காண்பித்துள்ளார்.
ஸ்டர்பேக்கின் பிரதான மஸ்ஜித் பணிப்பாளர் அப்துல் அஸீஸ் சுக்ரி தெரிவிக்கையில், குறித்த மனிதர் இவ்வாறு குர்ஆனை எரித்ததுடன், சுதந்திரத்தின் பேரில் இதனைச் செய்ய முடியும் எனவும் அவ்வொளிப்பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார் என்றார்.
இது தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கா விடின், இதனை அங்கீகரித்தவர்களாகி விடுவோம் எனவும் சுக்ரி தெரிவித்தார்.
குறித்த மனிதர், இதற்கு முன்னர் யூதர்களையும் பயணச் சமூகங்களையும் அவமதிக்கும் வகையிலான ஒளிப்பதிவுகளையும் வெளியிட்டுள்ளர் எனவும் சுக்ரி தெரிவித்தார். இந்த ஒளிப்பதிவாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முஸ்லிம் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம், செப்டம்பர் 11 தாக்குலின் நினைவாக, குர்ஆன் பிரதிகளை எரிக்கத் திட்டமிட்ட கிறிஸ்தவ பாதிரியாரின் திட்டமிடலைத் தொடர்ந்து இத்தகைய அனர்த்தங்கள் இஸ்லாமிய விரோத நாடுகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.