RSS

Monday 11 October 2010

தெஹ்ரானில் இடம்பெற்ற ஏழாவது சமய உரையாடல் சந்திப்பு


கலாச்சார குழு: தனிநபர் மற்றும் சமூக வாழ்க்கையில் சமயத்தின் பங்களிப்பு எனும் தலைப்பிலான ரஷ்ய ஒதடொக்ஸ் தேவாலயத்துடனான ஏழாவது சமய உரையாடல் சந்திப்பு, சமயங்களிடையிலான உரையாடலுக்கான நிலையத்தினால், அக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில் தெஹ்ரானில் இடம்பெற்றது.

இந்த இரு நாள் நிகழ்வில், ஜனாதிபதி ஆலோசகரும், அமைப்பின் தலைவருமான மஹ்தி முஸ்தபாவி மற்றும் ரஷ்ய ஒதடொக்ஸ் தேவாலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட கருப்பொருள்களாக, மஹ்தி முஸ்தபாவி மற்றும் பியா பிலகட் பாதிரி ஆகியோரின் 'சமூகத்தின் ஆன்மீக ஆரோக்கியத்தில் சமயத்தின் பங்கு', ஹுஜ்ஜதுல் இஸ்லாம் கமுஷி மற்றும் அசிபிவ் அலெக்சிஸ் எலிச் ஆகியோரின் 'ஓதடொக்ஸ் கிறிஸ்தவத்தின் பார்வையில் சமூக உறவுகள் மற்றும் சுதந்திரத்தை விருத்தி செய்வதிலான சமயத்தின் பங்கு', முதலானவை அமைந்திருந்தன.

இகமன் பிலிப் ரியாபிக் மற்றும் முஹம்மத் முஹம்மத்ரிசாயி ஆகியோரின் 'ஓதடொக்ஸ் கிறிஸ்துவம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகள் என்பவற்றுக்கிடையிலான இணைப்பு', யூனுஸ் நூர்பக்ஸ் மற்றும் இகமன் அலெக்சாந்தர் சர்கெசோ ஆகியோரின் சமூகப் புனிதத்துவத்திலும் நல்லுலகைத் தயார் செய்வதிலும் சமயத்தின் பங்கு' போன்ற தலைப்புகளும் இதில் முன்வைக்கப்பட்டன.

No comments:

Powered by Blogger.