RSS

Monday 11 October 2010

சில கீழைத்தேயவாதிகளின் ஆக்கங்கள், அமெரிக்கக் கொள்கைகளுக்குச் சேவையாற்றுகின்றன

ர்வதேச குழு: கீழைத்தேய அறிஞர்கள் சிலரின் இஸ்லாமிய ஆய்வுகள், மேற்கின் காலனித்துவ ஆதிக்கத்திற்குச் சேவையாற்றுவதையே நோக்காகக் கொண்டுள்ளன என்பதற்கு, 'நம்பிக்கையும் சக்தியும்:

மத்திய கிழக்கில் சமயமும் அரசியலும்' எனும் தலைப்பில், அமெரிக்க கீழைத்தேய அறிஞர் பேர்னார்ட் லூயிஸினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நூல் சிறந்ததொரு உதாரணம் என லெபனான் தினசரி அல்முஸ்தக்பல் எழுதியுள்ளது.

கிறிஸ்தவத்தைப் பரப்பவும் மேற்கில் இஸ்லாத்தின் பரவலைத் தடுக்கவும் மத்திய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றே கீழைத்தேயமாகும். காலப்போக்கில், நேர்மையான நடுநிலையான கீழைத்தேய அறிஞர்களும் தோன்றினர். இவர்கள் குர்ஆனையும் இஸ்லாமிய உலகையும் விஞ்ஞானபூர்வ அணுகுமுறையில் ஆய்வு செய்து சிறந்த ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். 

இத்தகைய நடுநிலையான ஆய்வுகளுக்கு மத்தியில், தற்போதும், மேற்குலகுக்கு குறிப்பாக அமெரிக்கா போன்ற காலனித்துவ சக்திகளுக்கு உதவும் போக்கிலான, இஸ்லாம் தொடர்பான பக்கச் சார்பான கருத்துக்களும் ஆய்வுகளும் கீழைத்தேய அறிஞர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

பேர்னார்ட் லூயிசும் இத்தகைய ஒருவரே. 1916ல் பிறந்த இவர் பிரித்தானிய-அமெரிக்க வரலாற்றாசிரியரும் கீழைத்தேய கற்கைகள் மற்றும் அரசியல் ஆய்வுரையாளருமாவார்.

தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இவர் கடமையாற்றி வருகின்றார்.
முன்னாள் அமெரிக்க வெளியுவறுச் செயலர் ஹென்ரி கிசிங்கர் நண்பர் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிதி புஷ்ஷின் ஆலோசகர் என்ற வகையில், லயிசும், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் அச்சுறுத்தலானவர்கள் எனக் கருதுகின்றார். 

இத்தகைய இஸ்லாமிய விரோத நூல்களின் வெளியீடு, சில கீழைத்தேய அறிஞர்கள் இன்னும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் அதன் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதிலும் ஆர்வமாக உள்ளனர் என்பதையே காட்டுகின்றது.

No comments:

Powered by Blogger.