RSS

Saturday 23 October 2010

அல்பேனிய மொழிக்கான புதிய மொழிபெயர்ப்பு வெளியிடப்படவுள்ளது

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: அல்பேனிய மொழிக்குப் பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆனின் புதிய மொழிபெயர்ப்பொன்று, இஸ்லாமிய அழைப்புக்கான உலக சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளது. 

தற்போது இம்மொழிபெயர்ப்பு நிறைவடைந்துள்ளதுடன், அது மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் அல்பேனிய இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிலையம் இதற்கு அனுசரணை வழங்கும் எனவும் அச்சங்கம் தெரிவிக்கின்றது.
இவ்விரு நிலையங்களும், இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் போதனைகள் தொடர்பான பல நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. 

அரபு – அல்பேனிய அகராதியொன்றை வெளியிடுவது, இவ்விரு நிலையங்களினாலும் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள மற்றொரு செயற்றிட்டமாகும். 

லிபியாவின் திரிப்போயைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய அழைப்புக்கான உலக சங்கம், உலகெங்கும் சுமார் 250 இஸ்லாமிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ள இலாப நோக்கற்ற ஒரு நிறுவனமாகும். 

குர்ஆனியப் போட்டிகளை ஒழுங்கு செய்தல், மஸ்ஜிதுகளையும் இஸ்லாமிய நிலையங்களையும் நிறுவுவது மற்றும் உலகெங்கும் இஸ்லாத்துக்குச் சேவையாற்றும் பணியாளர்களை கௌரவித்தல் என்பனவும் இந்நிலையத்தின் ஏனைய நடவடிக்கைகளுள் சிலவாகும்.

No comments:

Powered by Blogger.