RSS

Thursday 21 October 2010

ஈரானிய விஞ்ஞானி ஐசெஸ்கோவின் பரிசை வென்றார்

கலாச்சார குழு: இஸ்லாமிய கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் 2010ம் வருடத்திற்கான உயிரியல் பரிசை ஈரானிய விஞ்ஞானியொருவர் வென்றுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை, மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற, உயர்கல்வி மற்றும் விஞ்ஞான ஆய்வு அமைச்சர்களுக்கான ஐந்தாவது இஸ்லாமிய மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவத்தின் போது, ருயான் நிறுவனத்தின் ஸ்டெம் செல் ஆய்வுத் திணைக்களத்தின் ஆய்வாளரும் அறிஞருமான டாக்டர் ஹுஸைன் பஹர்வந்த் இந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டார். 

தஜிகிஸ்தானைச் சேர்ந்த மிசடோவ் உல்மாஸ், பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மத் காசிம்ஜான், ஜோர்டானைச் சேர்ந்த உபைதத் சியாத், பலஸ்தீனைச் சேர்ந்த முஹம்மத் சிபாட், மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முஹம்மத் அமீன் இம்பி ஆகியோர், முறையே இரசாயனவியல், கணிதவியல், உடலியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பரிசுகளை வென்றனர்.
ஐசெஸ்கோவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, உயர்கல்வி மற்றும் விஞ்ஞான ஆய்வு அமைச்சர்களுக்கான ஐந்தாவது இஸ்லாமிய மாநாட்டில், ஈரானின் விஞ்ஞான அமைச்சின் இரு பொறுப்பாளர்கள் உட்பட 48 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

இஸ்லாமிய நாடுகளிடையே விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளை விருத்தி செய்வதற்கான வழிகள் பற்றியக் கலந்துரையாடுவது இம்மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

No comments:

Powered by Blogger.