RSS

Monday 11 October 2010

புனித இறைத்தூதரின் பாரம்பரியம் தலைப்பிலான சர்வதேச சந்திப்பு துருக்கியில் ஆரம்பம்


சர்வதேச குழு: இறைத்தூதரின் பாரம்பரியம் தொடர்பான சர்வதேச மாநாடொன்று, அக்டோபர் 9ம் திகதி, துருக்கியின் ஸ்தான்புல் நகரில் ஆரம்பமானது. 

சாமானியுல்ஹபர் தினசரி தெரிவிப்பதாவது, துருக்கியின் தியானத் அமைப்பின் தலைவர் அலி பர்தகுக்லு, துருக்கியின் இஸ்லாமிய சட்டத்துறை பேராசிரியர் ஹைரத்தின் கரமன், எகிப்தின் முப்தி கலாநிதி அலி குமா முஹம்மத், மொரோக்கோ அறிஞர் அஹ்மத் இபாத் மற்றும் சிரிய அறிஞர்களான வஹாப் சுஹைலி மற்றும் சயீத் ரமதான் அல்புட்டி உள்ளிட்ட முஸ்லிம் அறிஞர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். 

'நம்பிக்கையின் கொள்கை', 'இஸ்லாத்தில் விதியும் முன்னளப்பும்', 'இறைநிராகரிப்பும் நவீனத்துவம் மற்றும் அறிவுடைமை என்பவற்றின் தேவையும்', 'இறைத்தூதரின் பார்வையில் தனிநபருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள்', 'சமூகத்தில் திருமணமும் ஆண்-பெண்களிடையிலான உறவும்', மற்றும் 'பிற சமயங்களைப் பின்பற்றுவோருடனான நபிகளாரின் தொடர்புகள்' என்பன இச்சந்திப்பில் ஆராயப்படவுள்ள கருப்பொருள்களாகும். 

இந்த இரண்டு நாள் சர்வதேச நிகழ்வு, அக்டோபர் 10ம் திகதி நிறைவு.

No comments:

Powered by Blogger.