RSS

Monday 11 October 2010

புர்கினா பஸ்கோவில் இடம்பெற்ற குர்ஆன் மனனப் போட்டி

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: குர்ஆன் மனனத்திற்கான உலக சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன், குர்ஆன் மனன நிலையத்தினால், குர்ஆன் மனனப் போட்டியொன்று, புர்கினா பஸ்கோவில் நடத்தப்பட்டது. 

சங்கத்தினது இணையத்தளத்தின் தகவலின்படி, இப்போட்டி, தலைநகர் ஒகடுகோவில், 71 போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன், ஆண் பெண் எனும் இரு பிரிவுகளில் இடம்பெற்றது.
அவர்கள், முழுக் குர்ஆன் மனனம், 15 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 10 ஜுஸ்உ குர்ஆன் மனனம் மற்றும் 5 ஜுஸ்உ குர்ஆன் மனனம் ஆகிய உப பிரிவுகளில் போட்டியிட்டனர்.
ஹஸன் கஜகா, அபுபக்கர் தரவரி மற்றும் அப்துல்லாஹ் காபூரி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அந்நாட்டின் குர்ஆன் மனனச் சங்கத்தின் தலைவர் அஹ்மத் சனகு, குர்ஆன் மனனத்திற்கான உலக சம்மேளனத்தின் பிரதிநிதி முஹம்மத் சாலிஹ் அல்மஸ்ஹர், மற்றும் புர்கினா பஸ்கோவிலுள்ள குர்ஆன் விவகார அதிகாரிகள் மற்றும் அறிஞர்கள் போன்றோர் இதில் கலந்து கொண்டனர். 

வைபவத்தில் உரையாற்றிய குர்ஆன் மனனத்திற்கான உலக சம்மேளனத்தின் பிரதிநிதி, உலகெங்கும் குர்ஆனியப் போதனைகளை பரவச் செய்வது தமது சம்மேளனத்தின் பிரதான இலக்கெனத் தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்றோருக்கு, வைபவத்தின் இறுதியில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

No comments:

Powered by Blogger.