RSS

Tuesday 12 October 2010

ஆஜ்மீர் தர்காவில் 39 நாள் உண்ணாவிரதம் இருந்த 3 பேர் உயிர் இழந்தனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. உத்தரபிரதேசம் அலகாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 1 1/2 ஆண்டாக ஆஜ்மீரில் வசித்து வந்தனர். அவர்கள் குடும்பத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டன. இதற்கு தீய சக்திகளின் பாதிப்புதான் காரணம் என்று கருதினார்கள்.
 
இது சம்பந்தமாக அவர்கள் ஒருவரிடம் குறிகேட்டுள்ளனர். அதற்கு அவர் 40 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் ஆஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் இருந்தால் தீயசக்தி விலகிவிடும் என்று கூறினார்.
 
இதை நம்பி அந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் ஆஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 39 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயிர் இழந்தனர். 25 வயது, 22 வயது கொண்ட 2 வாலிபர்களும், 16 வயது கொண்ட இளம் பெண்ணும் இறந்தனர்.
 
மற்ற 9 பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர். இதை அறிந்த தர்கா நிர்வாகத்தினர் 9 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.