RSS

Saturday 9 October 2010

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்களுக்கு விளக்கமளிப்பதற்கான புதிய இணையத்தளம்

சர்வசேத குழு: முஸ்லிம் ரெஸ்பொன்ஸ் அமைப்பு, இலாப நோக்கற்ற மற்றும் அரச சார்பற்ற தகவல் பரப்பல் இயக்கமொன்றை ஆரம்பித்துள்ளது.

இவ்வமைப்பின் ஸ்தாபகர் குறிப்பிடுகையில், முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துக்களும் பிரசாரங்களும் பரவலாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு சரியான விளக்கங்களையும் உண்மைகளையும் எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு முஸ்லிம்கள் அனைவருக்குமுள்ளது என்றார்.

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள குழு உறுப்பினர்களின் உதவியுடன், இவ்வமைப்பு, உலக விவகாரங்கள் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்களையும் கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவுள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியான முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்து அதிக கவனம் எடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.

அமைப்பின் முதலாவது செயற்றிட்டம், புளோரிடாவின் சிறிய கிறிஸ்தவ தேவாலயமொன்றில் திட்டமிடப்பட்டிருந்த குர்ஆன் எரிப்பு தினம் பற்றிய ஒரு சிறிய அனிமேஷன் முயற்சியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் ரெஸ்பொன்ஸ் அமைப்பு, அதன் இணையத்தளத்தை, உலகின் நடப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களுடனும் மல்டிமீடியா செய்திகளுடனும் தொடர்ச்சி மேம்படுத்தி வரவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் ரெஸ்பொன்ஸின் இலக்கு, தூரநோக்கு, அதன் நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிப்பதிவுகள் என்பவற்றைப் பார்வையிட பின்வரும் இணையத்தள முகவரியை பார்வையிடவும்:
                                                           http://www.muslimresponse.com. 

No comments:

Powered by Blogger.